கிண்டல் செய்தவர்களுக்கு ஹாலே பெர்ரி பதிலடி

கிண்டல் செய்தவர்களுக்கு ஹாலே பெர்ரி பதிலடி
Updated on
1 min read

தனது மகன் ஹீல்ஸ் வைத்த செருப்பைப் போட்டதால் இணையத்தில் கிண்டல் செய்தவர்களுக்கு நடிகை ஹாலே பெர்ரி பதில் கொடுத்துள்ளார்.

கரோனா கிருமித் தொற்றுப் பிரச்சினையால் அனைவரும் வீட்டிலேயே நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். இதில் திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வீட்டில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை தங்கள் ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் மூலமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல ஹாலிவுட் நடிகை ஹாலே பெர்ரி, வீட்டில் தனது மகன் மற்றும் மகளுடன் இருந்து வருகிறார். அவரது 6 வயது மகன், அவரின் ஹீல்ஸ் வைத்த செருப்பை அணிந்து வீட்டுக்குள் நடப்பதைப் போன்ற ஒரு வீடியோவை தனிமையில் 12-வது நாள் என்று குறிப்பிட்டுப் பகிர்ந்திருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் கலவையான கருத்துகளைப் பதிவிட்டனர்.

ஆனால், எதிர்மறையான கிண்டல்களை இனம் கண்டுகொண்ட பெர்ரி, உடனடியாக அவர்கள் வாயை அடைக்கப் பதில் சொன்னார். "யாரையும் காயப்படுத்தாத மகிழ்ச்சி. உயிர்வாழ முயன்று கொண்டிருக்கிறோம். புரிகிறதா? இந்தக் குழந்தைகளுக்கு கடினமான சூழல் இது. கொஞ்சம் சிரித்து, கொஞ்சம் இரக்கமும் பெறுவோம்" என்று ஒரு கருத்துக்குப் பதிலளித்தார்.

அதே நேரத்தில், நேர்மறையான சில கருத்துகளுக்கும் பதில் சொன்னார். "உடை அணிந்தும் எங்கும் செல்ல முடியாத மனநிலை" என்று சொன்னவருக்கு "இல்லை, அவன் செல்ல முயல்கிறான். ஆனால், அவன் அம்மா அவனை விட மாட்டேன் என்கிறார்" என்று பதிவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in