கோவிட்-19 தொற்றுப் பரவலைப் பற்றிய ஆவணப்படம்

கோவிட்-19 தொற்றுப் பரவலைப் பற்றிய ஆவணப்படம்
Updated on
1 min read

சீனாவில் வுஹான் நகரில் கரோனா கிருமி தொற்றின் கதையை ஒரு புதிய ஆவணப் படமாக முயன்றிருக்கிறார்கள்.

"Epicenter: 24 hours In Wuhan", என்று பெயரிடப்பட்டுள்ள இந்த 50 நிமிட ஆவணப்படம், கடந்த டிசம்பரில் கோவிட்-19 முதலில் தாக்கிய வுஹான் பகுதியில், மக்கள் எப்படி அதைக் கையாண்டார்கள் என்று காட்டுகிறது. வளர்ந்து வந்த சிக்கலை எதிர்கொள்ள எப்படி அந்த நகர மக்கள் ஒன்றாகத் திரண்டனர் என்பதைக் கூறுகிறது.

எதிர்பாராத இந்தச் சூழலில் மருத்துவத்துறை பணியாளர்கள் எப்படி இரவும் பகலும் அயராது உழைத்து இதைக் கட்டுப்படுத்தினர் என்பது இந்த ஆவணப்படத்தில் சொல்லப்படுகிறது. டாகு பே தளத்தில் ஸ்ட்ரீமிங்கில் இலவசமாகக் காணக்கிடக்கும் இந்த ஆவணப்படத்தை உலகம் முழுவதும் 180 நாடுகளில் பார்க்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in