

ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோன், தனது நீண்ட நாள் காதலர் டேவ் மெக்கேரியுடனான திருமணத் தேதியை கரோனா பீதியால் தள்ளி வைத்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
’லா லா லேண்ட்’ படத்துக்காகச் சிறந்த நடிகை என்ற ஆஸ்கர் விருதைப் பெற்றவர் எம்மா ஸ்டோன். ’பேட்மேன்’, ’அமேஸிங் ஸ்பைடர்மேன்’, ’கேங்க்ஸ்டர் ஸ்குவாட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2017 ஆம் ஆண்டிலிருந்தே எம்மா ஸ்டோனும் மெக்கேரியும் காதலித்து வருவதாகச் செய்திகள் வந்தன. ’சாடர்டே நைட் லைவ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மெக்கேரியும் ஒரு எழுத்தாளர்.
எம்மா ஸ்டோனுக்கும், மெக்கேரிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மெக்கேரி நிச்சயம் நடந்த செய்தியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காதலர்கள் இருவரும் மாற்றிக் கொண்ட மோதிரத்தைக் காட்டுவது போன்ற புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார்.