பேட்மேன் கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வு: ராபர்ட் பேட்டின்சன் குறித்து ஜோ க்ரேவிட்ஸ் கருத்து

பேட்மேன் கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வு: ராபர்ட் பேட்டின்சன் குறித்து ஜோ க்ரேவிட்ஸ் கருத்து
Updated on
1 min read

பேட்மேன் கதாபாத்திரத்துக்கு ராபர்ட் பேட்டின்சன் சரியாகப் பொருந்துகிறார் என நடிகை ஜோ க்ரேவிட்ஸ் தெரிவித்துள்ளார்.

டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் ‘பேட்மேன்’. உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஏற்கெனவே பல திரைப்படங்கள், கார்ட்டூன் தொடர்கள் மற்றும் டிவி தொடர்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மீண்டும் பேட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து 'தி பேட்மேன்' என்ற பெயரில் ஒரு படத்தை டிசி நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை மேட் ரீவ்ஸ் இயக்கி வருகிறது.

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தில், 'Twilight’ படங்களில் நாயகனாக நடித்த ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்து வருகிறார். கேட்வுமனாக ஜோ க்ரேவிட்ஸ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜோ க்ரேவிட்ஸ் தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ''ராபர்ட் பேட்டின்சனோடு பணிபுரிவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முன்னால் அவரோடு நான் நடித்ததில்லை. ஆனால், கடந்த சில வாரங்களாக நாங்கள் ஒன்றாக நடித்து வருகிறோம். அவர் ஒரு அற்புதமான, ஈடுபாடு மிக்க நடிகர். பேட்மேன் கதாபாத்திரத்துக்கு ராபர்ட் சரியான தேர்வு என்று நான் நினைக்கிறேன்.

அவர் என்னுடைய நண்பராகவும் எனக்கு உறுதுணையாகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இப்படத்தின் படப்பிடிப்பு நீண்டநாட்கள் நடக்கவிருப்பதால் அதிக அழுத்தம் இருக்கும். ராபர்ட்டுக்கு நானும் எனக்கு அவரும் உறுதுனையாகவும் இருப்போம்'' என்று ஜோ க்ரேவிட்ஸ் கூறியுள்ளார்.

‘தி பேட்மேன்’ படம் அடுத்த ஜூன் 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in