

92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ், கலிஃபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெற்று வருகிறது. இதில் 'ஜோக்கர்', 'ஐரிஷ்மேன்', '1917', 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்'ஆகிய திரைப்படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இம்முறை சிறந்த அயல்மொழித் திரைப்படம் என்ற விருதுப் பிரிவு, சிறந்த சர்வதேச திரைப்படம் என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்தப் பிரிவில் விருதை வென்ற 'பாராசைட்' இயக்குநர் பாங் ஜூன் ஹோ பேசுகையில் இந்தப் பெயர் மாற்றம் முடிவுக்கு அகாடமி தரப்புக்கு நன்றி தெரிவித்தார்.
சிறந்த திரைப்படம்
பாராசைட்
சிறந்த நடிகை
ரினே ஸெல்வேகர் - ஜூடி
சிறந்த நடிகர்
வாக்கின் ஃபீனிக்ஸ் - ஜோக்கர்
சிறந்த இயக்குநர்
பாங் ஜூன் ஹோ - பாராசைட்
சிறந்த பாடல்
ராக்கெட்மேன் - எல்டன் ஜான், பெர்னீ டாபின்
சிறந்த இசை
ஹில்டர் குட்னடாட்டிர் - ஜோக்கர்
சிறந்த சர்வதேசத் திரைப்படம் / அயல்மொழித் திரைப்படம்
பாராசைட் - தென் கொரியா
சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம்
பாம்ப்ஷெல்
சிறந்த கிராஃபிக்ஸ்
1917
சிறந்த படத்தொகுப்பு
ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி - மைக்கெல் மஸ்கர், ஆண்ட்ரூ பக்லேண்ட்
சிறந்த ஒளிப்பதிவு
1917 - ராஜர் டீகின்ஸ்
சிறந்த ஒலிக் கலவை
1917 - மார்க் டெய்லர், ஸ்டூவர்ட் வில்சன்
சிறந்த ஒலித் தொகுப்பு
ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி - டொனால்ட் சில்வெஸ்டர்
சிறந்த உறுதுணை நடிகை
லாரா டெர்ன் - மேரேஜ் ஸ்டோரி
சிறந்த ஆவணக் குறும்படம்
லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் எ வார்ஸோன்
சிறந்த ஆவணப் படம்
அமெரிக்கன் ஃபேக்டரி
சிறந்த ஆடை வடிவமைப்பு
லிட்டில் வுமன் - ஜாக்வலின் டுர்ரான்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு
ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்
சிறந்த குறும்படம்
தி நெய்பர்ஸ் விண்டோ
சிறந்த தழுவல் திரைக்கதை
ஜோஜோ ராபிட் - டைகா வைடிடி
சிறந்த அசல் திரைக்கதை
பாராசைட் - பாங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வொன்
சிறந்த அனிமேஷன் குறும்படம்
ஹேர் லவ்
(Hair Love)
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
டாய் ஸ்டோரி 4
(Toy Story 4)
சிறந்த உறுதுணை நடிகர்
பிராட் பிட் - ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்