‘‘கனவு போல இருக்கிறது; விரைவில் விழித்துக் கொள்வேன்’’- பாரஸைட் இயக்குநர் நெகிழ்ச்சி

‘‘கனவு போல இருக்கிறது; விரைவில் விழித்துக் கொள்வேன்’’- பாரஸைட் இயக்குநர் நெகிழ்ச்சி
Updated on
1 min read

'பாரஸைட்' படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது ஒரு கனவு போன்று இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் பாங் ஜூன் ஹோ கூறியுள்ளார்.

இயக்குநர் பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் தென் கொரியப் படமான ’பாரஸைட்’ கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதையும், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான கோல்டன் குளோப் விருதையும் வென்றது.

மேலும் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 6 பிரிவுகளில் 'பாரஸைட்' படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் இதழுக்குப் பேட்டியளித்துள்ள 'பாரஸைட்' படத்தின் இயக்குநர் பாங் ஜூன் ஹோ இதுபற்றிக் கூறுகையில், '' ‘இன்செப்ஷன்’ படத்தில் வரும் கனவு போல உணர்கிறேன். விரைவில் அந்தக் கனவிலிருந்து விழித்து விடுவேன் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது இதுபோன்ற விஷயங்கள் எதுவும் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு ஸ்விஸ் கைக்கடிகாரம் போன்ற ஒரு தரமான நேர்த்தியான படைப்பைத் தரவேண்டும் என்பது மட்டுமே எங்கள் எண்ணமாக இருந்தது. சிறந்த படத்துக்கான ஆஸ்கர் என்பது ஆசிய மற்றும் கொரியப் படங்களுக்கு அரிதிலும் அரிதான விஷயம்” என்று பாங் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in