53 வயதில் சிக்ஸ் பேக் வைத்த ஹாலே பெரி: வைரலாகும் புகைப்படங்கள்

53 வயதில் சிக்ஸ் பேக் வைத்த ஹாலே பெரி: வைரலாகும் புகைப்படங்கள்
Updated on
1 min read

நடிகை ஹாலே பெரி ஒரு திரைப்படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

'ப்ரூயிஸ்ட்' என்ற மிக்ஸ்டர் மார்ஷல் ஆர்ட்ஸ் பற்றிய திரைப்படத்தை ஹாலே பெரி இயக்கி நடிக்கிறார். இதற்காகத்தான் அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைத்துள்ளார். சிக்ஸ் பேக் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஹாலே பெரி வெளியிட்டுள்ளார். 53 வயதான ஹாலே பெரி சிக்ஸ் பேக் வைத்திருப்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல என அவரது தனிப்பட்ட பயிற்சியாளர் முபாரக் மாலிக் தெரிவித்துள்ளார்.

தினமும் நான்கு மணிநேர உடற்பயிற்சியும், கடுமையான கேடோ உணவுப் பழக்கத்தையும் ஹாலே பெரி பின்பற்றியுள்ளார். ''ஹாலே பெரி ஒரு உயர்நிலை தடகள வீராங்கனை'' என முபாரக் மாலிக் வர்ணித்துள்ளார். ஹாலே பெரி உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள ஹாலே பெரி, "ஒரு லட்சியத்தை வைத்து அதை அடையும்போது வரும் உணர்வை விடப் பெரியது எதுவுமில்லை. ப்ரூயிஸ்ட் படத்துக்காக எனது லட்சியங்களில் ஒன்று இந்த உடற்கட்டு. இன்று ஒருவழியாக நான் அதைப் பெற்றுவிட்டேன். என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் நினைப்பதை விட உங்களுக்கான எல்லைகளை உயர்த்தி வையுங்கள். வேலை சுலபமாக இருக்காது. ஆனால் அதற்குக் கிடைக்கும் பலனுக்கு ஒவ்வொரு விநாடியும் உகந்ததுதான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in