நடிகை டெமி மூர் வீட்டு நீச்சல்குளத்தில் மர்ம நபரின் சடலம்

நடிகை டெமி மூர் வீட்டு நீச்சல்குளத்தில் மர்ம நபரின் சடலம்
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் நடிகை டெமி மூரின் வீட்டு நீச்சல் குளத்தில் மர்ம மனிதரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மர்ம நபர் மரணம் குறித்து லாஸ் ஏஞ்செல்ஸ் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

'கோஸ்ட்', 'இன்டீஸெண்ட் ப்ரபோஸல்', 'டிஸ்க்ளோஷர்', 'அபொவுட் லாஸ்ட் நைட்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல நடிகை டெமி மூர் (52) வசிக்கும் லாஸ் ஏஞ்செல்ஸ் வீட்டில் மர்ம நபரின் சடலம் இருந்தது கண்டறியப்பட்டது.

போலீஸார் விசாரணையில் அந்த நபர் நீச்சல் குளத்தில் விழுந்த பின் இறந்ததாகவும் அவரது பெயர் எடெனில்சன் வேல்லே (21) என்றும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் நடந்தபோது டெமி மூர் மற்றும் அவரது குழந்தைகள் ஆகியோரும் வெளியூருக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

தனது வீட்டு நீச்சல்குளத்தில் இறந்து கிடந்த நபருக்கு டெமி மூர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த மர்ம மரணம் குறித்து லாஸ் ஏஞ்செல்ஸ் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இறந்த நபர் போதையில் விழுந்து அதிர்ச்சியில் இறந்திருக்கக் கூடும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்திருக்கும் லாஸ் ஏஞ்செல்ஸ் வீட்டை டெமி மூர் தனது 2-வது கணவர் அஷ்டான் கட்சருடன் சேர்ந்து வாங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in