வால்ட் டிஸ்னியின் 'டாம் அண்ட் ஜெர்ரி' மார்வெல் படமாக வருகிறது: 2020 டிசம்பரில் வெளியீடு

வால்ட் டிஸ்னியின் 'டாம் அண்ட் ஜெர்ரி' மார்வெல் படமாக வருகிறது: 2020 டிசம்பரில் வெளியீடு
Updated on
1 min read

லாஸ் ஏஞ்சல்ஸ்,

புகழ்பெற்ற கார்ட்டூன் அனிமேஷன் நகைச்சுவைப் படமான 'டாம் அண்ட் ஜெர்ரி' முற்றிலும் புதிய வடிவத்தில் மீண்டும் 2020-ம் ஆண்டு டிசம்பரில் திரைக்கு வருவதாக வார்னர்ஸ் பிரதர்ஸ் படக் கம்பெனி தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் அனிமேஷன் நகைச்சுவைப் பாத்திரங்களான டாம் அண்ட் ஜெர்ரியை உருவாக்கியவர் வால்ட் டிஸ்னி. அவருக்குப் பிறகு டாம் அண்ட் ஜெர்ரி பல வடிவங்களில் வெளிவந்துவிட்டது. அதன்பிறகு வந்தவர்கள் டாம், ஜெர்ரியை வைத்துக்கொண்டு பல்வேறு கற்பனைகளைப் புகுத்திக்கொண்டனர்.

தற்போது வால்ட் டிஸ்னியின் டாம் அண்ட் ஜெர்ரி மார்வெல் படக் கதாபாத்திரங்களாக வலம் வரப்போகிறார்கள். இப்படத்தில் சோலி கிரேஸ் மோரேட்ஸ், மைக்கேல் பெனா, கென் ஜியோங், ஜோர்டான் போல்ஜர் மற்றும் பல்லவி ஷார்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் புதிய திரைப்படத்தின் கதை மிகவும் எளிமையானது. டாம் பூனை மற்றும் ஜெர்ரி ஓயாத தொல்லை காரணமாக தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். ஒரு ஆடம்பரமான நியூயார்க் ஹோட்டலுக்கு இடம்பெயர்கிறார்கள். அங்கு மோரெட்ஸின் கதாபாத்திரம் ஒரு ஊழியராக இருப்பதால், ஜெர்ரியை வெளியேற்றாவிட்டால் வேலையை இழக்க நேரிடும் நிலை அவருக்கு ஏற்படுகிறது. ஆனால் இக்கட்டான இந்த சூழ்நிலையில் டாம் மற்றும் ஜெர்ரி எப்படி சமாளிக்கிறார்கள் என்பதுதான் நகைச்சுவை ததும்ப சொல்லப்பட்டுள்ளது.

தற்போது வார்னர் பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்த லைவ்-ஆக்ஷன் ஹைப்ரிட் நகைச்சுவைப் படத்தை டிம் ஸ்டோரி இயக்கியுள்ளார். இப்படம் ஆரம்பத்தில் 2020, ஏப்ரல் 16-ம் தேதி அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் 2020-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி அன்று இப்படம் வெளியாகும் என்று வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் 2021-ம் ஆண்டு வரை ஸ்லாட்கள் இருப்பதால் பெயரிடப்படாத இப்படம் 2021-ல்தான் வெளியிடப்படும் என வெரைட்டி பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in