பெண் ஜேம்ஸ்பாண்டுக்கான நேரம் வந்துவிட்டது: முன்னாள் பாண்ட் நடிகர் கருத்து

'டுமாரோ நெவர் டைஸ்' படத்தில் ப்ராஸ்னன் - மிஷல் யோ
'டுமாரோ நெவர் டைஸ்' படத்தில் ப்ராஸ்னன் - மிஷல் யோ
Updated on
1 min read

ஆண்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துப் பார்த்துவிட்டோம். பெண்கள் பாண்டாக நடிக்கும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் பாண்ட் நடிகர் பியர்ஸ் ப்ராஸ்னன்.

'கோல்டன் ஐ', 'டுமாரோ நெவர் டைஸ்', 'தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப்', 'டை அனதர் டே' உள்ளிட்ட ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பியர்ஸ் ப்ராஸ்னன். அவரைத் தொடர்ந்து டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் 'நோ டைம் டு டை' தான் தனது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படமாக இருக்கும் என டேனியல் க்ரெய்க் அறிவித்துவிட்ட நிலையில், அடுத்த பாண்ட் நடிகருக்கான தேடல் நடைபெற்று வருகிறது. சிலர் இது கறுப்பின நடிகராக இருக்கலாம் என யூகித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பியர்ஸ் ப்ராஸனனிடம் கேட்கப்பட்டது. "கடந்த 40 வருடங்களாக ஆண்கள் அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதைப் பார்த்துவிட்டோம். வழிவிடுங்கள் ஆண்களே. அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு பெண்ணை நடிக்கச் செய்யுங்கள். அது அற்புதமாக இருக்கும். ஆனால் தயாரிப்பாளர் பார்பரா ப்ரோக்கோலி இருக்கும் வரை அது நடக்காது என நினைக்கிறேன். ஜேம்ஸ் பாண்டுக்கென ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. ஆழ்ந்த பெருமை இருக்கிறது. நான் இறக்கும் நாள் வரை அதுபற்றி என்னிடம் கேட்கப்படும். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது பெருமை" என்று ப்ராஸ்னன் கூறியுள்ளார்.

'நோ டைம் டு டை' அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

- ஏ என் ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in