

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனை மையமாக வைத்து காமெடிப் படம் எடுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரியில், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பின்னர் கைபர் பக்துன்வா மாகாணத்தின் பாலகோட் நகரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது முகாமில் இந்தியப் படைகள் தாக்குதல் நடத்தின.
இந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு விவேக் ஓபராய் குழுவினர் தயாரிக்கும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மும்மொழிகளில் தயாராகிறது. இத்திரைப்படத்திற்கு 'பாலகோட் - தி ட்ரூ ஸ்டோரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
அபிநந்தனின் வீரதீரத்தைப் பற்றி பேசும் படமாக 'பாலகோட் தி ட்ரூ ஸ்டோரி' படம் இருக்கும் என்று திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான விவேக் ஓபராய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு எதிராக, அபிநந்தனை மையமாக வைத்து காமெடிப் படம் ஒன்றைத் தயாரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இதனை பாகிஸ்தானின் மூத்த திரைக்கதை ஆசிரியரான கலில் அர் ரஹ்மான் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்திற்கு 'Abhinandan Come On’ என்று பெயரிடத் திட்டமிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.