

புதுடெல்லி
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் தற்போது வெளியிட் டுள்ள பட்டியலில் கடந்த முறை இடம்பிடித்த இந்திய நடிகைகள்யாரும், இம்முறை இடம்பெறவில்லை.
உலக அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டு வருகிறது. அந்த வகை யில், நிகழாண்டுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
இதில், அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் இடம்பெற்றுள்ளார். இவரது தற்போதைய சம்பளம் ரூ. 400 கோடியாகும். இவருக்கு அடுத்தபடியாக, இப்பட்டியலில் ஹாலிவுட் நடிகை சோபியா வெர்ஹரா இடம்பிடித்துள்ளார். தற்போது இவர் வாங்கும் சம்பளம் ரூ.329 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் 3-வது, 4-வது இடங்களில் முறையே ஹாலிவுட் நடிகைகள் ரீஸி வித்தர்ஸ்பூனும் (ரூ.250 கோடி), நிக்கோலே கிட்மேனும் (ரூ.243 கோடி) இடம்பெற்றிருக்கின்றனர்.
இதேபோல், 10 நடிகைகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு, ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் ஹாலி வுட் நடிகை தீபிகா படுகோன் இடம் பெற்றிருந்தார். அப்போது அவர் 10-இடத்தைப் பிடித்திருந்தார். இந் நிலையில், தற்போதைய பட்டியலில் அவர் இடம்பிடிக்கவில்லை.
அதேபோல், நடப்பாண்டு தொடக்கத்தில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அதிக செல்வாக்கு பெற்ற பெண்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா (94-வது இடம்) பெயர் இருந்தது. ஆனால், ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்த அப் பிரிவுக்கான பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்