

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கு 'நோ டைம் டு டை' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை ஜேம்ஸ் பாண்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் நேற்று (20.08.19) உறுதி செய்துள்ளது.
அந்த பதிவில், '2020ஆம் லண்டனின் ஏப்ரல் 03ஆம் தேதி மற்றும் அமெரிக்காவில் ஏப்ரல் 08ஆம் தேதிகளில் வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை' படத்தில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடிக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.
1953ஆம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பான்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். 1962ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளன. வியக்கவைக்கும் ஆக்ஷன் காட்சிகள், புதிய தொழிநுட்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதைகளை கொண்ட இப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.
கடைசியாக வெளியான நான்கு பாண்ட் படங்களில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார். அடுத்ததாக வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை' ஜேம்ஸ் பாண்டாக க்ரெய் நடிக்கும் கடைசி படமாகும்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு வெளியாவுள்ள ஜேம்ஸ் பாண்ட் படத்துக்காக ஹாலிவுட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அமலாபாலுக்கு எவ்வளவு தைரியம்!: வசுந்தரா பேட்டி - வீடியோ