செய்திப்பிரிவு

Published : 21 Aug 2019 12:08 pm

Updated : : 21 Aug 2019 12:53 pm

 

மீண்டும் வருகிறது 'The matrix'- அடுத்த பாகம் தயார்!

the-matrix-4-is-ready-to-shoot

’The matrix’ படவரிசையின் நான்காம் பாகத்தில் கீனு ரீவ்ஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1999ஆம் ஆண்டு வக்காவ்ஸ்க்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் ‘The matrix'. கீனு ரீவ்ஸ் நடித்த இந்த படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற தொழில்நுட்பங்களும், ஆக்‌ஷன் காட்சிகளும் அதுவரை திரையுலகம் காணாதவை.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ’The Matrix Reloaded’ என்ற படமும், அதே ஆண்டின் இறுதியில் 'The Matrix Revolutions’ என்ற படமும் வெளியாகி வெற்றியைக் குவித்தன.

இப்படங்களை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனமும் வில்லேஜ் ரோட்ஷோ நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தன.

’The matrix’ படவரிசையின் நான்காம் பாகத்தை எடுப்பது நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது ’The matrix 4’ குறித்தும் அதில் நடிக்கப்போகும் நடிகர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து வக்காவ்ஸ்க்கி சகோதரிகளில் ஒருவரான லானா வக்காவ்ஸ்க்கி தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார், அதில் அவர் கூறியதாவது,


20 ஆண்டுகளுக்கு முன்பு நானும் லில்லியும் யோசித்த பல விஷயங்கள் இப்போது பொருத்தமாக இருக்கின்றன. இந்த கதாபாத்திரங்கள் மீண்டும் வாழ்க்கையில் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய புத்திசாலி நண்பர்களும் பணியாற்ற இன்னொரு வாய்ப்பு கிடைத்ததற்கு நான் நன்றியுடைவளாக இருப்பேன்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நியோவாக கீனு ரீவ்ஸ், டிரினிட்டியாக கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளனர். வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனமும் வில்லேஜ் ரோட்ஷோ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தின் தயாரிப்பு பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கலாம் என்று தயாரிக்கப்படுகிறது.

இன்று வரை பல்வேறு ஆக்‌ஷன் படங்களுக்கு முன்னோடியாக திகழும் ’The matrix’ வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதன் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருப்பது ஹாலிவுட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

The matrixThe matrix 4கீனு ரீவ்ஸ்The Matrix RevolutionsThe Matrix ReloadedKeanu reeves
Popular Articles

You May Like

More From This Category

More From this Author