செய்திப்பிரிவு

Published : 20 Aug 2019 11:54 am

Updated : : 20 Aug 2019 13:29 pm

 

12 ஆண்டுகள் காதலித்தவரை திருமணம் செய்த ‘தி ராக்’

rock-getting-married

முன்னாள் WWE மல்யுத்த வீரரும் பிரபல ஹாலிவுட் நடிகருமான 'தி ராக்' ஜான்சன் தனது 12 வருடக் காதலியைத் திருமணம் செய்துள்ளார்.

கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கு சச்சின் டெண்டுல்கரைத் தெரியாமல் இருக்க முடியாது. அதுபோல WWE மல்யுத்த ரசிகர்கள் மத்தியில் 'தி ராக்' என்ற பெயர் மிகவும் பிரபலம்.

WWE உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் 'தி ராக்' என்று அழைக்கப்படும் ட்வேய்ன் ஜான்சன். 90களின் மல்யுத்த ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இருந்த ட்வேய்ன் ஜான்சன் முதன் முதலாக 2001ஆம் ஆண்டு வெளியான 'தி மம்மி ரிட்டர்ன்ஸ்' படத்தில் வில்லனாக நடித்தார். அவர் ஏற்று நடித்த ‘ஸ்கார்பியன் கிங்’ என்ற கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதற்கு அடுத்த ஆண்டு 'தி ஸ்கார்பியன் கிங்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் பெரும் வெற்றியைப் பெறவே தொடர்ந்து ‘ஹெர்குலஸ்’, 'ராம்பேஜ்’, 'ஜார்னி 2’, 'ஃபாஸ்ட் அண்ட் தி ஃப்யுரியஸ்’, 'ஜுமான்ஜி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹாப்ஸ் அண்ட் ஷா’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 12 ஆண்டுகளாக காதலித்து வந்த லாரன் ஹாஷியன் என்பவரை கடந்த 18ஆம் தேதி ஹவாய் தீவில் திருமணம் செய்துள்ளார். இந்தத் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ள அவருக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ட்வேய்ன் ஜான்சன் தனது முதல் மனைவியான டேனி ஹார்சியாவை கடந்து 2007ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு 18 வயதில் சிமோன் என்ற மகளும் உள்ளார். அதன் பிறகு லாரன் ஹாஷியனுடன் வாழ்ந்து வரும் ஜான்சனுக்கு ஜாஸ்மின், டியானா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

The rockDwane jhonsonWWE12 வருட காதலிLauren harshian
Popular Articles

You May Like

More From This Category

More From this Author