10 வருடங்களாக முதலிடத்தில் இருந்த ’அவதார்’ படத்தின் வசூலை முறியடித்த ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’

10 வருடங்களாக முதலிடத்தில் இருந்த ’அவதார்’ படத்தின் வசூலை முறியடித்த ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’

Published on

கடந்த 10 ஆண்டுகளாக வசூலில் உலக அளவில் முதலிடத்தில் இருந்த ’அவதார்’ படத்தின் வசூலை  ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம் முறியடித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம், சர்வதேச அளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலை அள்ளிக் குவித்த 'அவெஞ்சர்ஸ்' வெகுவேகமாக 2 பில்லியல் டாலர் என்ற வசூலைத் தொட்டது.

 ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'அவதார்' தான் இதுவரை திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை கொண்டிருந்தது. அந்த படம் உலகம் முழுவதும் இதுவரை வசூலித்த தொகை  2.788 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வரை 2.743 பில்லியன் டாலர்கள் வரை மட்டுமே வசூலித்திருந்தது. 
'அவதார்' வசூல் சாதனையை முறியடிக்க மேலும் 45 மில்லியன் டாலர்கள் தேவை என்ற நிலையில் டிஸ்னி - மார்வல் தயாரிப்புத் தரப்பு கூடுதலாக சில காட்சிகளை சேர்ந்து படத்தை மீண்டும் பரவலாக வெளியிட்டது.

இந்நிலையில் நேற்றைய (ஜூலை 20) நிலவரப்படி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வசூலில் முதலிடத்தில் இருந்த அவதார் படத்தின் வசூலை முறியடித்து $2.789 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது  'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in