

பிரபல அமெரிக்க வார இதழான பீப்பிள், ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக்கை, 2015-ஆம் ஆண்டின், உலகின் மிக அழகிய பெண்ணாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
இது குறித்துப் பேசிய சாண்ட்ரா, "இது கேலிக்குரிய விஷயமாக இருக்கிறது. இதைப் பற்றி நான் யாரிடமும் பகிரவில்லை" என்றார்.
உங்கள் பார்வையில் அழகு என்றால் என்ன என்ற கேள்விக்கு, "உண்மையான அழகு அமைதியாக இருக்கும். அதுவும் நாம் வாழும் சூழலில், ’நான் அவரைப் போல இருக்க வேண்டும்’ என சொல்லாமல் இருப்பது கடினம். யாரைப் போலவும் இருக்க வேண்டாம். நல்ல மனிதராக, நல்ல தாயாக இருக்கலாம். அழகாக இருக்க முயற்சி செய்யாதவர்களே எனக்கு மிக அழகாகத் தெரிகிறார்கள்" என பதிலளித்துள்ளார்.
’கிராவிட்டி’ படத்தில் நடித்து விமர்சகர்களின் பாராட்டை பெற்ற 50 வயதான சாண்ட்ரா புல்லக் 5 வயது மகனுக்குத் தாயாவார்.