

வெளியான ஒரே வாரத்தில் இந்தியாவில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனையை பியூரியஸ் 7 திரைப்படம் படைத்துள்ளது.
வின் டீசல், மறைந்த பால் வாக்கர், ராக் ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தின் 7-ஆம் பாகமான பியூரியஸ் 7, இந்தியாவில் 2800 திரையரங்குகளில் 2டி, 3டி மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் வெளியாகியுள்ளது .
இந்த வசூல் சாதனை குறித்து யுனீவர்சல் பிக்சர்ஸின் மேலாளர் சரப்ஜித் சிங் கூறுகையில், "இந்தியாவில் அதிகபட்ச அரங்குகளில் வெளியான ஹாலிவுட் படம் என்ற முறையில் பியூரியஸ் 7 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்தியாவின் நகரங்களைத் தாண்டியும் ஹாலிவுட் படங்களுக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது" என்றார்.
யூனிவர்சல் பிக்சர்ஸ், அடுத்ததாக, ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்தை வெளியிடவுள்ளது. ஜுராசிக் பார்க் பட வரிசையை சேர்ந்த இத்திரைப்படம் ஜூன் மாதம், ஆங்கிலம், இந்தி, தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.