

கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் படங்களில் அதிக வசூல் பெற்ற படமாக 'பிக் ஹீரோ 6' உருவெடுத்துள்ளது. உலக அளவில் இதுவரை 620 மில்லியன் டாலர்களை இத்திரைப்படம் வசூலித்துள்ளது.
மார்வெல் காமிக்ஸ் வடிவில் வந்த 'பிக் ஹீரோ 6', 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரைப்படமாக வெளியானது. பலூன் போன்ற ரோபோவும், அதை உருவாக்கிய சிறுவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து செய்யும் சாகசங்களே 'பிக் ஹீரோ 6' படத்தின் கதை.
வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டூடியோவின் படைப்பான 'பிக் ஹீரோ 6', அமெரிக்காவில் மட்டும் 221 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. சீனாவில் மட்டும் 51 மில்லியன் டாலர்களும், தென் கொரியா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளில் 75 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாகவும் வசூலித்துள்ளது. மலேசியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக வசூல் செய்த அனிமேஷன் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதையும் 'பிக் ஹீரோ 6' பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.