கருப்பை அகற்றம்: துணிவுடன் அறிவித்த ஏஞ்சலினா ஜோலி

கருப்பை அகற்றம்: துணிவுடன் அறிவித்த ஏஞ்சலினா ஜோலி
Updated on
1 min read

புற்றுநோய் அபாயத்தின் காரணமாக பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது கருப்பையையும் கருமுட்டைக் குழாய்களையும் சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டார்.

பிரபலமாக இருக்கும் அவர் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துணிச்சலுடன் இதனை வெளியிட்டுள்ளார்.

மருத்துவ நிபுணர்களும் புற்றுநோயை எதிர்த்து போராடுபவர்களும் ஏஞ்சலினா ஜோலியின் வெளிப்படைத்தன்மையை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, நடிகர் பிராட் பிட் தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் 3, தத்தெடுத்த குழந்தைகள் 3 என மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். ஏஞ்சலினா ஜோலியின் தாயார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயுடன் போராடி 56 வயதில் உயிரிழந்தார்.

இதனிடையே ஏஞ்சலினா ஜோலிக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய மரபணுக்கள் இருப்பது தெரியவந்த நிலையில் தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காக கடந்த 2013-ஆம் ஆண்டு மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறை மூலம் மார்பகங்களை அவர் அகற்றிக் கொண்டார்.

இதனை வெளிப்படையாக அறிவித்த ஏஞ்சலினாவை பார்த்து மற்றவர்களும் துணிச்சலுடன் சிகிச்சையை செய்து கொள்ள முன்வந்தனர்.

இதற்காக 'ஜோலி எஃபெக்ட்' என்று மருத்துவ உலகில் அவர் பாராட்டப்பட்டார். தற்போது ஏஞ்சலினா தனது கருப்பையையும் கருமுட்டைக் குழாய்களையும் அகற்றிக் கொண்டுள்ளார்.

பிரான்ஸில் இந்த சிகிச்சையை செய்து கொண்டதாகவும், தனது கணவர் பிராட் பிட் மற்றும் குழந்தைகளுடன் நலமுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை வெளிப்படையாக தெரிவிப்பதால் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதாலே இதனை தெரிவித்திருப்பதாக ஜோலி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in