நோய்வாய்ப்பட்ட ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எமினெம்

நோய்வாய்ப்பட்ட ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய எமினெம்
Updated on
1 min read

ராப் பாடகர் எமினெம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரைச் சந்தித்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

17 வயதான கேஜ் கார்மோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் போகவே அவர் இன்னும் சில நாட்களில் இறந்து விடுவார் என தெரிவிக்கப்பட்டது. பாடகர் எமினெமின் ரசிகரான கார்மோ, தான் இறப்பதற்கு முன் அவரை ஒருமுறை சந்திக்கவேண்டும் என விரும்பினார்.

இதையடுத்து கார்மோவின் நண்பர்களும், உறவினர்களும் #GetGageGarmoToMeetEminem என்ற ஹாஷ் டேகை உருவாக்கி, இவ்விஷயத்தை எப்படியாவது எமினெமின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

இதை தெரிந்து கொண்ட எமினெம், மிசிகனில் இருக்கும் கார்மோவின் வீட்டிற்கு சென்று அவருடன் ஒரு மணிநேரம் உரையாடிவிட்டு வந்துள்ளார். இது குறித்து எந்த ஊடகத்திடமும் தெரிவிப்பதை எமினெம் விரும்பவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in