

72-வது கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவில் நடந்து முடிந்தது. இதில் சிறந்த படம் (டிராமா பிரிவு), சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த உறுதுணை நடிகை ஆகிய விருதுகளை 'பாய் ஹூட்' திரைப்படம் தட்டிச் சென்றது.
ஆஸ்கர் விருதுகளுக்கு அடுத்து பெரிய கவுரவமாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுகள், ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் ஹாலிவுட் பத்திரிகை கூட்டமைப்பால் வழங்கப்படுகிறது. அந்தந்த வருடத்தில் வந்த சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கும், கலைஞர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒரு சிறுவனின் வாழ்க்கை 12 வருடங்களில் எப்படி மாறுகிறது என்பதைத் துல்லியமாகக் காட்டிய படம் 'பாய் ஹூட்' (Boy hood). இதற்காக தேந்தெடுக்கப்பட்ட நடிகர் நடிகைகளை வைத்து 12 ஆண்டுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல், 'பாய் ஹூட்' முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றது. டிராமா பிரிவில் சிறந்த திரைப்படம் என்ற விருதோடு, ரிச்சர்ட் லிங்க் லேடர் சிறந்த இயக்குநர் விருதையும், பாட்ரிசியா சிறந்த உறுதுணை நடிகை விருதையும் பெற்றனர்.
சிறந்த திரைப்படம் - மியூசிகல், காமெடி பிரிவில், 'தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்' (The Grand Budapest Hotel) விருதைத் தட்டிச் சென்றது. சிறந்த திரைக்கதைக்கான விருதை 'பேர்ட் மேன்' (Birdman) திரைப்படமும், சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை 'ஹவ் டு ட்ரெயின் யுவர் டிராகன் 2' (How to train your Dragon 2) திரைப்படமும் வென்றன.
கோல்டன் க்ளோப் திரைப்பட விருதுகள் வென்றவர்களின் முழு பட்டியல்:
சிறந்த நடிகர் (டிராமா பிரிவு)
எட்டி ரெட்மெய்ன் - படம்: தி தியரி ஆஃப் எவ்ரிதிங்
சிறந்த நடிகை (டிராமா பிரிவு)
ஜுலியன் மூர் - படம்: ஸ்டில் ஆலிஸ்
சிறந்த உறுதுணை நடிகர்
ஜே.கே.சிம்மன்ஸ் - படம்: விப்ளாஷ்
சிறந்த உறுதுணை நடிகை
பாட்ரிசியா ஆர்கெட் - படம்: பாய் ஹூட்
சிறந்த இயக்குநர்
ரிச்சர்ட் லிங்க்லேடர் - படம்: பாய் ஹூட்
சிறந்த திரைப்படம் (காமெடி / மியூசிக்கல் பிரிவு)
தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்
சிறந்த நடிகர் (காமெடி / மியூசிக்கல் பிரிவு)
மைக்கேல் கீடன் - படம்: பேர்ட் மேன்
சிறந்த நடிகை (காமெடி / மியூசிக்கல் பிரிவு)
ஏமி ஆடம்ஸ் - படம்: பிக் ஐஸ்
சிறந்த இசை
ஜோஹான் ஜொஹான்ஸன் - படம்: தி தியரி ஆஃப் எவ்ரிதிங்
சிறந்த பாடல்
க்ளோரி - படம்: செல்மா
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
ஹவ் டு ட்ரெயின் யுவர் டிராகன் 2
சிறந்த திரைக்கதை
பேர்ட் மேன்
சிறந்த அயல் மொழித் திரைப்படம்
லெவியதான் (ரஷ்யா)