

அடுத்த ஸ்டார் வார்ஸ் படத்தில் தோன்றும் விண்கலத்தின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
80-களில் ஹாலிவுட்டையே புரட்டிப் போட்ட திரைப்படம் ஸ்டார் வார்ஸ். தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களைப் பெற்றுள்ள ஸ்டார் வார்ஸ் இது வரை மொத்தம் 6 பாகங்கள் வெளியாகியுள்ளன. இதோடு ஒரு அனிமேஷன் திரைப்படமும் வெளியாகியுள்ளது.
தற்போது 'ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்' என்ற பெயரில் அடுத்த பாகம் தயாராகிவருகிறது. 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தை ஜே.ஜே. ஆப்ராம்ஸ் இயக்கிவருகிறார்.
ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வரும் விநோத தோற்றங்கள் கொண்ட பாத்திரங்களும், இயந்திரங்களும், முக்கியமாக விண்கலங்களும் மிகப் பிரபலம். ஏற்கனவே படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ஃபோர்ஸ் அவேகன்ஸ் திரைப்படத்தில் தோன்றவுள்ள விண்கலத்தின் படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
</p>