ஹேக்கர்களின் அடுத்த குறி பாப் பாடகர்கள்?

ஹேக்கர்களின் அடுத்த குறி பாப் பாடகர்கள்?
Updated on
1 min read

பிரிட்டைனைச் சேர்ந்த பாப் பாடகர் குழு 'ஒன் டைரக்‌ஷன்', பாடகிகள் அடெல் மற்றும் பியோன்ஸே உள்ளிட்டவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஹேக்கர்களால் களவாடப்பட்டுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு சோனி நிறுவனத் தகவல்களை ஹேக் செய்த நபர்களே இதையும் செய்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

பாடகர்களின் தனிப்பட்ட உரையாடல்கள், மின்னஞ்சலில் பரிமாறப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகியவை களவாடப்பட்டுள்ளன. இந்த ஹேக்கர்கள் வட கொரியாவின் பையாங்கியாங் நகரத்தில் இருப்பதாக எஃப்.பி.ஐ (FBI) கண்டறிந்துள்ளது.

கலைஞர்களைப் பற்றிய தகவல்கள் கசிந்தால் அது அவர்களை பெரும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கும். முன்னதாக, இவ்வாறு கசிந்த சோனி நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள், தி இன்டர்வியூ திரைப்படத்தின் வெளியீட்டை கடுமையாக பாதித்தது.

இதே போல, சோனி மியூஸிக் நிறுவனம் வெளியிடவுள்ள ஒரு சில பாடல்களும் ஹேக்கர்களால் கள்ளத்தனமாக பதிவேற்றப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் என சோனி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மைக் ரையா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சோனியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஹேக்கிங் விவகாரத்தினால் நிறுவனத்தின் உயர் மட்டக் குழு பதட்டமடைந்துள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in