

பாப் பாடகி மடோனாவின் அடுத்த ஆல்பத்திலிருந்து 14 பாடல்கள் கள்ளத்தனமாக இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பாடகி மடோனாவின் அடுத்த ரெபல் ஹார்ட் ஆல்பத்தில் இந்த பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
ரெபெல் என்றால் போராளி என்று அர்த்தம். "உண்மையான போராளிகள் சுயமாக சிந்திப்பார்கள். உண்மையான போராளிகள் கலையை மதிப்பார்கள். உண்மையான போராளிகள் மனதளவிலும் போராளிகளாக இருப்பார்கள்", என இதுகுறித்து தனது வருத்தத்தை சமூக வலைதளம் ஒன்றில் மடோனா தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே, முடிவு பெறாத நிலையில் மடோனாவின் சில பாடல்கள் இணையத்தில் கள்ளத்தனமாக பதிவேற்றப்பட்டன. இது கலைக்கு நேர்ந்த மானபங்கம், தீவிரவாதத்தின் ஒரு வடிவம் என தனது கோபத்தை மடோனா வெளிப்படுத்திருந்தார். தொடர்ந்து தனது ஆல்பத்தின் முன்பதிவை ஐடியூன்ஸில் துவக்கி 6 பாடல்களை வெளியிட்டார்.