

தங்களை கடவுளுக்கு அருகில் எடுத்துச் செல்ல, சிலர் போதை மருந்தை உட்கொள்வதாகவும், ஆனால் அது வெறும் மாயை மட்டுமே என்றும் பாப் பாடகி மடோனா கூறியுள்ளார்.
"நான் பலமுறை கூறியிருக்கிறேன். அதிகமாக போதை மருந்து எடுத்துக் கொள்ளும்போது வேறு நிலைக்குச் சென்றது போல இருக்கும். கடவுளுக்கு அருகில் இருப்பது போல தோன்றும். போதை, மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வைத் தரும். ஆனால் முடிவில் அது உங்களைக் கொல்லும்.
நான் அனைத்தையும் கடந்துதான் வந்துள்ளேன். ஆனால் நான் போதை மருந்து எடுத்துக் கொண்டபோதெல்லாம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப, லிட்டர் கணக்கில் தண்ணீரைக் குடிப்பேன். போதையின் உச்சத்தை அடையும்போதெல்லாம், எனக்கு இது வேண்டாம், போதும் என்று எனக்குத் தோன்றும்"
இவ்வாறு மடோனா கூறியுள்ளார்.