

ரசிகர்களுக்காக ஆட்டோகிராஃப் அளித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, காவல் தடுப்பு உடைந்ததால் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ் ஓடிச் சென்றார்.
'ஹங்கர் கேம்ஸ்', 'எக்ஸ் மென்', 'சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் இவர் பெற்றுள்ளார். நியூயார்க்கில் உள்ள எட் சல்லிவன் தியேட்டரில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க லாரன்ஸ் வந்திருந்தார்.
அவரைக் காண பல ரசிகர்கள் அரங்கிற்கு வெளியே குவிந்திருந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தடுப்பு போட்டிருந்தனர். திரண்டிருந்த ரசிகர்கள் சிலருக்கு ஆட்டோகிராஃப் தர முன்வந்தார் லாரன்ஸ். கையெழுத்து போட ஆரம்பித்த சில நேரத்திலேயே கூட்ட மிகுதியால் தடுப்பு கீழே விழ, லாரன்ஸ் தனது காருக்கு ஓட்டம் பிடித்தார். அவரது பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக கூட்டிச் சென்றனர்.
ஜெனிஃபர் லாரன்ஸ் தப்பிச் சென்ற வீடியோவும் நேற்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுவிட்டது.