

ஷேப் ஆஃப் யூ பாடல், இந்தியாவில், யூடியூப் மூலம் அதிகம் பார்க்கப்பட்ட சர்வதேச வீடியோ என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
கிராமி விருது வென்ற அமெரிக்க பாடகரான எட் ஷீரன் இயற்றிய பாடல் ஷேப் ஆஃப் யூ. ஜனவரி மாதம் வெளியான இந்தப் பாடல் சில சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. யூடியூப் வீடியோ பகிர்வு தளத்தில் இந்தப் பாடலின் அதிகாரபூர்வ வீடியோ வடிவம் பதிவேற்றப்பட்டது.
தற்போது இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட சர்வதேச வீடியோ என்ற புகழைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலின் வெவ்வேறு வடிவங்கள் பல பயனர்களால் பதிவேற்றப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
சோனி இசை நிறுவனத்தில் சர்வதேச இசை மற்றும் வெளியீடு பிரிவு இயக்குநராக இருக்கும் அர்ஜுன் சங்காலியா இது குறித்து பேசுகையில், "பாடல் வெளியாகும்போதே அது ஹிட் ஆகும் என எங்களுக்குத் தெரியும். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருந்தது. பல்வேறு இந்திய இசை வடிவங்கள் மற்றும் மொழிகளில் இந்தப் பாடலின் வடிவம் பதிவேற்றப்பட்டதன் மூலம் அதை தெரிந்து கொள்ளலாம். இந்த வருடத்துக்குள் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுவிடுவோம் என நினைக்கிறேன்" என்றார்.