

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஜேம்ஸ் பாண்ட் படவரிசையின் அடுத்த படைப்பு அடுத்த வருடம் வெளியாகவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்தான அறிவிப்பை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ கோல்ட்வையின் மேயர் அறிவித்துள்ளது.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் படவரிசையின் 25-வது படமான லெஜண்டரி சூப்பர் ஸ்பை அடுத்த வருடம் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி வெளியாகிறது.
இதற்கு முன்னர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்த டேனியல் கிரேக்கே தொடர்வாரா? அல்லது வேறு ஒருவர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினர் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என்று படக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.