

தயாரிப்பாளர்கள் விரும்பும் வரை பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிப்பேன் என நடிகர் பென் ஆஃப்லெக் கூறியுள்ளார்.
'பேட்மேன் vs சூப்பர்மேன்' படத்தைத் தொடர்ந்து, 'ஜஸ்டிஸ் லீக்' படத்திலும் பேட்மேன் கதாபாத்திரத்தில் பென் ஆஃப்லெக் நடித்துள்ளார். தொடர்ந்து அவர் அந்தப் பாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை என செய்திகள் வந்தன.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, "அவர்கள் விரும்பும் வரை நான் அதில் நடிப்பேன். கண்டிப்பாக எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் வேறொருவர் நடிப்பார். யாராவது மிகச்சிறந்த நடிகரை அவர்கள் தேர்வு செய்வார்கள் என நம்புகிறேன். ஆனால் நான் நடிக்கும் வரை அந்தக் கதாபாத்திரத்துக்கு தேவையானதை முடிந்த வரை உண்மையாக செய்வேன். நான் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும்" என பதில் கூறினார்.