

தனது அடுத்த 'ரெடி ப்ளேயர் ஒன்' படத்துக்காக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து பணியாற்றியதாக பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கூறியுள்ளார்.
எர்னஸ்ட் க்ளைன் என்பவர் எழுதிய 'ரெடி ப்ளேயர் ஒன்' என்ற கதை திரைப்படமாக உருவாகியுள்ளது. ஸ்பீல்பெர்க் இயக்கிய இந்த படம் மெய்நிகர் உலகைப் பற்றியது.
"நான் தவறாக பேசினால் ஸ்டீவ் என்னைத் திருத்தலாம். ஆனால் கேமரூன் 'அவதார்' எடுத்துக் கொண்டிருக்கும்போது அவருடன் இணைந்து மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என பயிற்சி எடுத்துக் கொண்டார்" என படத்தின் திரைக்கதையாளர் ஸாக் பென், தெரிவித்துள்ளார்.
"ஸ்டீவ் மாதிரியான ஒரு இயக்குநர், நான் புதிதாக ஒரு விஷயத்தை வேறொரு இயக்குநரிடமிருந்து கற்றுக்கொள்கிறேன் என்று சொல்வது மிகவும் ஆச்சரியமானது. இந்த தொழில்நுட்பத்தை தெரிந்து கொண்டதால், காட்சிகள் திட்டமிடும்போது பல நூறு கோணங்கள் அவருக்கு கிடைத்தது" என்றும் பென் பேசியுள்ளார்.
ரெடி ப்ளேயர் ஒன், 2018ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று வெளியாகவுள்ளது.