ஆம்பியன்ஸ்.. இது உலகின் மிக நீளமான படம்: டிரெய்லர் மட்டுமே 72 மணி நேரம்

ஆம்பியன்ஸ்.. இது உலகின் மிக நீளமான படம்: டிரெய்லர் மட்டுமே 72 மணி நேரம்
Updated on
1 min read

உலக சினிமா வரலாற்றில் நீளமான படம் என்ற சாதனையை ஏற்படுத்த தயாராகியுள்ளது 'ஆம்பியன்ஸ்' என்ற திரைப்படம்.

2 மணி நேரத்தை தாண்டினாலே சலிப்பு ஏற்பட்டு திரையரங்கிலிருந்து வெளியேறும் ரசிகர்கள் உள்ள காலத்தில் சுமார் 30 நாட்கள் (730 மணி நேரம்) ஓடக்கூடிய இப்படத்தை ஸ்வீடனைச் சேர்ந்த ஆண்ட்ரூ வெப்பர்க் உருவாக்கியுள்ளார்.

72 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தின் டீசர் 2014-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த டீசர் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களால் காணப்பட்டு சினிமா ரசிகர்களை எதிர்பார்ப்புக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு எடிட்டிங் பணியும் சமீபத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் 72 மணி நேரம் ஓடக்கூடிய ட்ரெய்லர் 2018 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் கதைச் சுருக்கம் குறித்து இயக்குனர் ஆண்ட்ரூ கூறும்போது, “விண்வெளி, காலம் இவற்றுக்கு இடையே பிணைக்கப்பட்ட ஒரு கனவுப் பயணம்தான் இப்படம்” என்று தெரிவித்தார்.

ஆண்ட்ரூ வெப்பர்க்கின் கனவுப் படமாக உருவாகியுள்ள ஆம்பியன்ஸ் திரைப்படம் 2020-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in