த நட் ஜாப் 2 படத்துக்கு குரல் கொடுக்கிறார் ஜாக்கி சான்

த நட் ஜாப் 2 படத்துக்கு குரல் கொடுக்கிறார் ஜாக்கி சான்
Updated on
1 min read

மூன்று 'குங்ஃபூ பாண்டா' படத் தொடர்களுக்கும் குரல் கொடுத்திருந்த நடிகர் ஜாக்கி சான், தற்போது அனிமேஷன் படமான 'த நட் ஜாப் 2' -வுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.

'த நட் ஜாப்' படத்தில் நடித்திருந்த காத்தரீன் ஹெய்ல், மாயா ருடால்ஃப், வில் ஆர்னெட், கேப்ரியல் இக்லேசியல் ஆகியோர் இதிலும் நடிக்கின்றனர். படத்தில் எலிக் கூட்டத்தின் தலைவர் பாத்திரத்துக்கு குரல் கொடுத்திருக்கிறார் ஜாக்கி.

இது குறித்துப் பேசிய படத்தின் இயக்குநர் கால் ப்ரங்கர், ''ஜாக்கி, எங்களின் 'த நட் ஜாப் 2'- க்கு குரல் கொடுத்திருப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. அவர் தன்னுடைய குரல் மூலம் எங்களின் படத்துக்கு தனி கவனத்தை கொடுத்திருக்கிறார்.

ஜாக்கி மாதிரியான திறமையான, விருதுகள் வாங்கும், கலாச்சார அடையாளத்தைக் கொண்ட நடிகருடன் வேலை பார்த்தது உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

எங்களின் அனிமேஷன் படத்தில் ஜாக்கி சான், எலிக்கூட்டத்தின் தலைவரான மிஸ்டர் ஃபெங்குக்கு குரல் கொடுத்திருக்கிறார்'' என்று கூறினார்.

'த நட் ஜாப் 2' கதை

கோபக்கார அணில் ஒன்று, தன் மற்ற விலங்கின நண்பர்களோடு சுதந்திர பூங்காவில் வசித்து வருகிறது. அந்த நகரத்தின் மேயர் சுதந்திர பூங்காவை அழித்து, ஆபத்தான பூங்காவைத் தொடங்க நினைக்கிறார். அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

படம் மே 2017-ல் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in