

'இன்டிபென்டஸ் டே: ரீசர்ஜன்ஸ்' பட இயக்குநர் ரோலண்ட் எமரிச், சூப்பர் ஹீரோ படங்கள் யாவும் அற்பமாக இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.
கார்டியன் இதழுக்கு பேட்டியளித்த ரோலண்ட், சூப்பர் ஹீரோக்கள் பற்றியும், அவர்களின் படங்கள் குறித்தும் பேசினார். அதில்,
''என்னுடைய படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கதாநாயகர்கள் சாதாரணமான, நட்பான மனிதர்களாக இருப்பார்கள். அற்புதமான பல படங்களில், நடிகர்கள் வேடிக்கையான உடைகளில் சுற்றி வருகிறார்கள்.
எப்போது பார்த்தாலும் எந்த நடிகராவது சூப்பர் ஹீரோ போல வேடிக்கையாக உடையணிந்து, பறக்கின்றனர். இதைப் பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. இது ஏன் என்றும் எனக்குப் புரியவில்லை. நான் ஜெர்மனியில் வளர்ந்ததால் என்னவோ, இப்படி இருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.