ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் அனைத்து இடங்களையும் பிடித்த ’Game of Thrones’

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் அனைத்து இடங்களையும் பிடித்த ’Game of Thrones’
Updated on
1 min read

இன்று வெளியாகியுள்ள ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ (Game of Thrones - GOT) ஆங்கிலத் தொடரின் 8ஆவது சீசனின் முதல் எபிசோட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

1991ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய A Song of Ice and Fire என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டதே ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர். இத்தொடரின் முதல் எபிசோட் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடர் இதுவரை 7 சீசன்களாக வெளியாகியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் 10 பகுதிகள்.

பரபரப்பும், எதிர்பாராத திருப்பங்களுடனும் எழுதப்பட்ட திரைக்கதையாலும் இத்தொடர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது.

வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் போர்  தான் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.

இத்தொடரின் இறுதி அத்தியாயம் இன்று வெளியாகியுள்ள 8வது சீசன். அது எப்போது ஒளிபரப்பாகும் என கடந்த ஒரு வருடமாக ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையில் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ 8வது சீசனின் முதல் எபிசோட் இன்று ’ஹாட்ஸ்டார்’ வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு எபிசோட்களாக தினமும் வெளியிடப்படும்.

இந்நிலையில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் ’Game of Thrones’ ஹாஷ் டேகுகள் மற்ற அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளன.

முதலிடத்தில் #GameofThrones என்ற ஹாஷ்டேகும், அதனை தொடர்ந்து சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களான ப்ரான், சான்ஸா, ஆர்யா, டெனேரிஸ், ஜேமி, செர்ஸி ஆகிய பெயர்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in