Published : 28 Apr 2019 09:30 AM
Last Updated : 28 Apr 2019 09:30 AM

‘அவெஞ்சர்ஸ்  எண்ட்கேம்: ரசிகர்களை சுற்றும் மார்வல் சினிமா உலகம்!

காமிக்ஸ் தொடர்கள், கார்ட்டூன் சித்திரங்கள்... போன்ற சில கலை வடிவங்கள், இப்போதும் நமது இளம்வயது ஞாபகக் குறிப்புகளாய்  நம் நினைவின் அடுக்குகளில் தங்கியிருக்கலாம்.

மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (MCU) என்றழைக்கப்படும் மார்வல் காமிக்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்ட கற்பனை சினிமா உலகத்தை ரசிக்க மேலே சொன்ன அனுபவம் பெரிதும் கைகொடுக்கும்.

2008-ல் முதன்முதலாக சுழலத் தொடங்கிய மார்வல் சினிமா உலகின் முதல் திரைப்படம் ‘அயர்ன்மேன்’. இப்படம், ராபர்ட் டவுனி ஜூனியர் என்ற நடிகரை ஒரே இரவில் சர்வதேச நட்சத்திரமாக மின்ன வைத்தது.

 மார்வல் சினிமா உலகின் முதல் கட்டத்தில் (2008 - 2012) ‘அயர்ன்மேன்’, ‘ஹல்க்’, ‘அயர்ன்மேன் 2’, ‘தார்’, ‘கேப்டன் அமெரிக்கா’, ‘அவெஞ்சர்ஸ்’ போன்ற படங்கள் அணிவகுத்தன. இப்படங்களின் முக்கிய வில்லனான தானோஸின் முகத்தை ரசிகர்கள் பார்த்தது 2012-ல் வெளியான ‘அவெஞ்சர்ஸ்’ படத்தில்தான்.

‘அயர்ன்மேன் 3’, ‘தார் 2’, ‘கேப்டன் அமெரிக்கா 2’, ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’, ‘அவெஞ்சர்ஸ் 2’, ‘ஆண்ட் மேன்’ என அடுத்த 6 படங்களோடு 2015-ல் நிறைவடைந்தது மார்வல் சினிமா வின் 2-வது கட்டம். இக்காலகட்டத்தில் மில்லி

னியம் தலைமுறை ரசிகர்கள் மார்வல் சினிமாக்களை சிநேகமுடன் சிலா கித்தார்கள்.

சர்வதேச ரசிகர்களை ஈர்த்த இப்படங் களின் 3-வது கட்டத்தில் 12 படங்கள் வெளியாகின. இதில் ‘ப்ளாக் பேந்தர்’ ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

மார்வலுக்கு போட்டி என்று பார்க்கப் படும் டிசி காமிக்ஸ் படங்கள், இப்போது தான் தத்தி தத்தி நடந்து மார்வலின் ஆரம்ப கட்ட வெற்றியை சுவைக்க ஆரம்பித்திருக் கின்றன. ஆனால், இவை எதுவுமே மார்வல் படங்களின் கூப்பிடு தூரத்துக்கு பக்கத்தில் கூட நெருங்க முடியவில்லை.

ஏன் இத்தனை வரவேற்பு?

சென்னை நகரத்தில்  ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்துக்கான முதல் நாள் வசூல் மட்டுமே ரூ.1.20 கோடியைத் தாண்டும் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். இது 2019-ல் வெளியான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ போன்ற படங்களைக் காட்டிலும் அதிகம்.

ஏன் இத்தனை வரவேற்பு? அதற்கு காரணம், இப்படங்கள் வெறும் விளையாட் டுத்தனமான காமிக்ஸ் கதைகள் மட்டுமல்ல.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பு, சூப்பர் ஹீரோக்களாக இருந்தாலும் அவர் களிடமும் இருக்கும் கோளாறு, தனி மனித விருப்பங்களால் ஏற்படும் பிரச்சினை, உறவு சிக்கல், சூப்பர் ஹீரோக்களுக்குள் இருக்கும் கருத்து மோதல்கள் என்பதெல்லாம் சேர்ந்து தான் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதில் சில சமயம் சூப்பர் ஹீரோக்களை விட சூப்பர் வில்லனான தானோஸின் கையும் அவ்வப்போது ஓங்கும்.

கிராஃபிக்ஸால் எதுவும் சாதிக்க முடியும், எதை வேண்டுமானாலும் திரையில் கொண்டுவர முடியும் என்ற சுதந்திரமும், பட்ஜெட்டும் ஹாலிவுட்டில் இருந்தாலும், அவர்கள் அப்படி திரையில் கொண்டு வரும் அத்தனை படங்களும் வெற்றிபெற முடிவதில்லை. இதில் மார்வல் சினிமா மட்டும் ஒவ்வொரு படத்திலும் சொல்லி அடிப்பதற்குக் காரணம், மேற்சொன்ன காரணங்கள்தான்.

‘எண்ட்கேம்’ என்ன சொல்கிறது?

பிரதான வில்லன் தானோஸின் சித்தாந்தம் மிகவும் எளிமையானது. அதிக ஜனத் தொகையால்தான் ஒவ்வொரு கிரகமும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால், எப்போதுமே இந்த ஜனத்தொகை ஒரு கட்டுப்பாட்டில் இருந்தால் அது எல்லோருக்கும் நல்லது என்பதுதான். இதற்கு வழி? இன்ஃபினிடி ஸ்டோன்ஸ் என்று அழைக்கப்படும் 6 கற்களை ஒன்றிணைத்து, அதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்தில் பாதி உயிர்களை அழிப்பதுதான். அதைத்தான் தானோஸ், கடந்த ‘இன்ஃபினிடி வார்’ படம் முடியும்போது செய்தான். பல உயிர்களை அழித்து, 6 கற்களையும் இணைத்து, ஒரே சொடக்கில் பிரபஞ்சத்தில் பாதியை அழித்துவிட்டு தற்போது நிம்மதியாக தனது கிரகத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ஆனால் சக சூப்பர் ஹீரோக்களை இழந்த துயரம் மிச்சமிருப்பவர்களைத் தொடர்ந்து வாட்டிக் கொண்டே இருக்க, இறந்துபோன வர்களை எப்படியாவது மீட்டுக் கொண்டு வர முடியுமா என வழி தேடிக் கொண்டிருக் கிறார்கள். அப்படி அவர்களுக்கு கிடைக்கும் ஒரு வழியில் ஆயிரம் ஆபத்துகள் நிறைந் துள்ளன. எல்லாவற்றையும் மீறி, நம் ஹீரோக்களால் சாதிக்க முடிந்ததா என்பதே ‘எண்ட்கேம்’.

முதல் காட்சியில் இருந்தே கதையை ஆரம்பித்து அடுத்தடுத்து கோர்வையாக நகர்த்தி, போகும் வழியில் பல முடிச்சுகளை அவிழ்த்து, புதிய முடிச்சுகளைப் போட்டு, ரசிகர்களை உணர்ச்சிமயமாக்கி, நெகிழ வைத்து, சிரிக்க வைத்து, ஆர்ப்பரிக்க வைத்து, கண்ணீர் விட வைத்து முடிகிறது ‘எண்ட்கேம்’.

11 வருடங்கள், 21 படங்கள், நூற்றுக்கணக் கான தொலைக்காட்சி தொடர்ப் பகுதிகள், சில குறும்படங்கள், சில காமிக்ஸ் தொடர் கள், நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள் எல்லாம் சேர்ந்த உச்சகட்டம்தான் இந்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’.

அடுத்தது என்ன?

சர்வதேச அளவில் ‘எண்ட்கேம்’ பல்வேறு வசூல் சாதனைகளை ஏற்கெனவே படைத்து வருகிறது. ஆனால் ‘கேப்டன் அமெரிக்கா’, ‘அயர்ன்மேன்’,‘ தார்’ உள்ளிட்ட கதாபாத்

திரங்களில் நடித்த நடிகர்கள், இனி அதில் நடிக்கப் போவதில்லை, ஒப்பந்தமும் முடிந்துவிட்டது என்று அறிவித்திருக்கிறார் கள். அப்படியென்றால் இத்துடன் முடிந்ததா மார்வல் சகாப்தம்? அதுதான் இல்லை. எல்லாவற்றுக்கும் சூத்திரதாரியான மார்வல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீக், ‘‘எண்ட்கேம் படத்துக்குப் பிறகு ‘ஸ்பைடர் மேன்’ படத்தின் அடுத்த பாகம்தான். வேறு எந்தப் புது அறிவிப்பும் இல்லை’’ என்று சொல்லிவிட்டாலும், இன்னும் 6 படங்களுக் கான வேலைகளை மார்வல் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்கின்றனர் ஹாலிவுட் நிருபர்கள். தற்போது டிஸ்னி நிறுவனம்  ‘20-த் செஞ்சுரி ஃபாக்ஸ்’ நிறுவனத்தையும் விலைக்கு வாங்கிவிட்டதால், ‘எக்ஸ் மென்’, ‘டெட்பூல்’ உள்ளிட்ட மார்வல் கதாபாத்திரங் களும் மார்வல் சினிமா உலகில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்வல் போட்டிருக்கும் இந்த 10 ஆண்டுகால விதையானது அடுத்தடுத்து வரும் காலங்களில் ஆலமரமாய் விரிந்து இன்னும் பல கதைகள், இன்னும் பல கதாபாத்திரங்களோடு ரசிகர்களை மகிழ் விக்கும் என்பதில் சந்தேகமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x