திருமணமான 4 நாட்களிலேயே 4-வது மனைவியை விவாகரத்து செய்யும் நடிகர் நிகோலஸ் கேஜ்

திருமணமான 4 நாட்களிலேயே 4-வது மனைவியை விவாகரத்து செய்யும் நடிகர் நிகோலஸ் கேஜ்
Updated on
1 min read

ஹாலிவுட் நடிகர் நிகோலஸ் கேஜ், தனது நான்காவது மனைவியை, திருமணமான நான்காவது நாளிலேயே விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்கு அவரது மனைவி எய்ர்கா கோய்கியூம் சம்மதம் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 23-ம் தேதி, 35 வயதான கோயிகியை 55 வயதான நிகோலஸ் கேஜ் திருமணம் செய்துகொண்டார். ஒப்பனைக் கலைஞரான கோய்கியை திருமணம் செய்யும் முன், இருவரும் அளவுக்கதிகமாக குடித்து போதையில் இருந்ததாகவும், என்ன நடக்கிறது என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமலேயே திருமணம் செய்து கொண்டதாகவும் கேஜ் விவாகரத்துக்கான கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கோய்கி விவாகரத்துக்கு சம்மதித்துவிட்டாலும், கேஜுடன் இருந்த உறவினால் தனக்குப் பல வாய்ப்புகள் பறிபோய், அவரது குற்றச்சாட்டினால் தனது பெயரும் கெட்டிருப்பதாகவும், இதனால் கண்டிப்பாக ஜீவனாம்சம் தரவேண்டும் என்றும் பதிலளித்துள்ளார். மேலும், இந்த வழக்குக்கான செலவுகளையும் கேஜ் ஏற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in