

பாடல்களுக்காகவே வெற்றிபெற்ற மை ஃபேர் லேடி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆந்த்ரே பிரெவின் நேற்று காலமானார். அவருக்கு வயது 89.
மன்ஹாட்டனில் உள்ள அவரது இல்லத்தில் பிரெவின் இறந்ததை அவரது மேலாளர் நேற்று மாலை உறுதி செய்தார். ஹாலிவுட்டில் ஆந்த்ரே பிரெவின் இசையமைத்த ஏராளமான திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனை படைத்தன. அவற்றில் முக்கியமானவை கிகி, போர்கி அன்ட் பெஸ், இர்மா லா டியூஸெ மற்றும் மை ஃபேர் லேடி போன்ற படங்களாகும். இந்த நான்கு படங்களுக்காகவும் அவர் நான்கு முறை ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார்.
டிசைனிங் வுமன் மற்றும் ஹாட் சம்மர் நைட்ஸ் போன்ற படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். சினிமா தவிர ஆல்பங்கள், சேம்பர் மியூசிக், ஓபராஸ். ஆர்கெஸ்ட்ராக்கள் என தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பங்களிப்பை ஆற்றி வந்துள்ளார்.
அவ்வகையில் ஜாஸ் ரசிகர்கள் இவரை மிகச்சிறந்த ஒரு ஜாஸ் பியானிஸ்ட்டாகவே அறிந்துள்ளார்கள். மேலும் டினேஷ் ஷோருடன் இணைந்து இவர் கொண்டு வந்த இரண்டு இசை ஆல்பங்கள் மிகவும் புகழ் பெற்றவை. தவிர, கிறிஸ்துமஸ் கார்லோஸ், ஜூலி ஆந்த்ரேஸ் மற்றும் ஜியார்ஜ் கெர்ஷ்வின் ஆகியோருடன் இணைந்து ராப்சோடி இன் புளூ தொகுப்பு மிகவும் முக்கியமானது.
அரை டஜன் டஜன் இசைக் கலைஞர்களுடனும் சேர்ந்து முதன்மை நடத்துநராக பணியாற்றிய ஆர்க்கெஸ்ட்ரா கான்செர்ட்டோக்கள் குறிப்பிடத்தக்கவை.
தனது 20கள் 30களிலேயே இசையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்ததோடு அதிலேயே தொடர் சாதனைகளையும் இவர் நிகழ்த்தியதால் விமர்சகர்கள் இவரை மிக்கி மவுஸ் மேஸ்ட்ரோ என்று வர்ணித்தனர். தலைசிறந்த இசைக்கலைஞர்களுக்கென்று வழங்கப்படும் உலகின் முக்கியவிருதான கிராமி விருது பெற்றவர் ஆந்த்ரே பிரெவின் என்பது குறிப்பிடத்தக்கது.