

உலகம் முழுதும் திரைத்துறை யில் பரப்பரப்பாக இயங்கும் திரைக் கலைஞர்கள் அனைவருடைய கனவும் ஆஸ்கர் விருது பெறுவது தான். அந்த விருதை பெறுவதால் அந்தப் படைப்பாளி மட்டுமல்ல; விருதுக்குரிய திரைப்படத்தை படைத்தவருடைய தாய்நாடும் சேர்ந்து பெருமையைச் சூடிக் கொள்ளும். அந்த வகையில் ஹாலி வுட் திரையுலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ் சலீஸ் நகரில் நேற்று நடை பெற்றது.
இந்தப் பெருமைக்குரிய விருது விழாவில், உலகம் முழுவதும் கடந்த ஆண்டு வெளியான திரைப் படங்களில் சிறந்த திரைப்படங் களைத் தேர்வு செய்து விருது வழங் கப்பட்டுள்ளது. போஹிமியன் ராப் சடி, பிளாக் பந்தார் ஆகிய படங் கள் பெரும்பாலான பிரிவுகளில் பல விருதுகளை வென்றுள்ளன.
இவ்விருது விழாவில் இந் தியாவில் இருந்து சென்று போட்டி யில் கலந்துகொண்ட ‘பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ என்ற ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் வழங் கப்பட்டுள்ளது. பெண்களின் மாதாந்திரப் பிரச்சினையான மாத விலக்கு தொடர்பான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசும் இந்த ஆவணப்படத்தை கலிஃபோர் னியாவைச் சேர்ந்த மெலிசா பெர் டன் இந்தியாவைச் சேர்ந்த குனீத் மோங்கா என்பவருடன் சேர்ந்து தயாரித்துள்ளார். இதை இயக் கியவர் அமெரிக்காவைச் சேர்ந்த ரெய்கா ஸெஹ்டாப்ச்சி என்பவ ராவார்.
ஆஸ்கர் விருது விழாவில் 2018-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ:
சிறந்த திரைப்படம்: பீட்டர் ஃபரேலி இயக்கிய ‘க்ரீன் புக்’ திரைப் படம் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது.
சிறந்த நடிகை: ‘தி ஃபேவ ரைட்’ படத்தில் நடித்த ஒலிவியா கோல்மன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
சிறந்த நடிகர்: ’போஹிமியன் ராப்சடி’ படத்தில் நடித்த ரமி மாலிக் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
சிறந்த இயக்குநர்: ‘ரோமா’ படத்தை இயக்கிய அல்போன்சோ கவுரானுக்கு சிறந்த இயக்குநருக் கான ஆஸ்கர் விருது வழங்கப் பட்டது
சிறந்த துணை நடிகர்: மகர்ஷாலா அலி (க்ரீன் புக்)
சிறந்த துணை நடிகை: ரெஜினா கிங் - இஃப் பெலே ஸ்டிரிட் குட் வாக்
சிறந்த வெளிநாட்டு திரைப் படம்: ரோமா (மெக்சிகோ)
சிறந்த ஆவணப்படம்: பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் (இந்தியா)
சிறந்த அனிமேஷன் திரைப் படம்: ஸ்பைடர் மேன் : இண்டு தி ஸ்பைடர் வெர்ஸ்
சிறந்த திரைக்கதை: க்ரீன் புக்
சிறந்த தழுவல் திரைக்கதை: சார்லி வாச்டெல், டேவிட் ராபின் சன், கெவின் வில்மோட், ஸ்பைக் லீ - பிளாக்லென்சன் திரைப்படம்
சிறந்த இசை: லுட்விக் கோரன் சன் - பிளாக் பந்தர்
சிறந்த பாடல்: ஏ ஸ்டார் பார்ன் - ஷோலோ திரைப்படம்
சிறந்த ஆவணப்படம்: பிரி சோலோ
சிறந்த குறும்படம்: இன்
சிறந்த சண்டை காட்சி: ஸ்கின்
சிறந்த ஒளிப்பதிவு: அல் போன்சோ கவுரான் - ரோமா திரைப்படம்
சிறந்த அனிமேஷன் காட்சி: பாவோ
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: பிளாக் பந்தர்
சிறந்த ஆடை வடிவமைப்பு: பிளாக் பந்தர்
சிறந்த ஒப்பனை: வைஸ்
சிறந்த ஒலிப்பதிவு : போஹிமி யன் ராப்சடி
சிறந்த ஒலி கலவை: போஹிமியன் ராப்சடி
சிறந்த எடிட்டிங் : போஹிமியன் ராப்சடி
சிறந்த காட்சி: ஃபர்ஸ்ட் மேன்