தோழியை திருமணம் செய்துகொண்ட நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட்!

தோழியை திருமணம் செய்துகொண்ட நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட்!
Updated on
1 min read

லாஸ் ஏஞ்சல்ஸ்: தனது நீண்டநாள் தோழியான டைலன் மேயரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட்.

ஹாலிவுட்டில் ‘ட்விலைட்’ படங்களின் மூலம் பெரும் பிரபலமானவர் கிறிஸ்டன் ஸ்டீவர்ட். அப்படத்தில் நடித்த ராபர்ட் பட்டின்சனை நான்கு ஆண்டுகள் காதலித்து வந்தார். அதன்பிறகு இருவருக்கும் சில காரணங்களால் பிரேக் அப் ஆனது. கடந்த 2017ஆம் ஆண்டுதான் ஒரு பைசெக்சுவல் என்று அறிவித்தார் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட். திரைக்கதை எழுத்தாளரும் நடிகையுமான டைலன் மேயருடன் தான் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக 2019ஆம் ஆண்டு கிறிஸ்டன் ஸ்டீவர்ட் அறிவித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஸ்டீவர்ட்டின் வீட்டில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஒருவாரத்துக்கு முன்பே இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிறிஸ்டன் ஸ்டீவர்ட், “டைலன் என்னை ப்ரோபோஸ் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். எனக்கு தேவையான விஷயங்களை நானே கவனமாக அமைத்தேன். அவர் மிகவும் அழகான பெண். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்” என்று தெரிவித்த நிலையில், இப்போது கரம்பிடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in