கண் பார்வையை இழந்த ஆஸ்கர் விருது நடிகை!

கண் பார்வையை இழந்த ஆஸ்கர் விருது நடிகை!
Updated on
1 min read

பிரபல இங்கிலாந்து நடிகை ஜுடி டென்ச் (Judi Dench). ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ‘எம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற இவர், ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’ (1998) படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.

மிசஸ் பிரவுண் (1997), ஐரிஸ் (2001), நோட்ஸ் ஆன் எ ஸ்கேண்டல் (2006), கோல்டன் ஐ (1995) உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

91- வயதான இவர், தனது பார்வையை இழந்து விட்டதாகவும் தன்னால் தனியாக விழாக் களில் கலந்துகொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். “நான் என் கண் பார்வையை இழந்துவிட்டேன். யாரோ ஒருவர் எனக்குத் துணையாக எப்போதும் இருக்க வேண்டும். இல்லை என்றால் விழுந்துவிடுவேன். இதனால் படங்களில் நடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டிலேயே இவர் தனது கண்பார்வையை மெதுவாக இழந்து வருவதாகக் கூறியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in