‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் நடித்த ஒலிவியா ஹஸ்ஸி காலமானார்

‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் நடித்த ஒலிவியா ஹஸ்ஸி காலமானார்
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் நடிகை ஒலிவியா ஹஸ்ஸி (Olivia Hussey). 73 வயதான இவர் கடந்த 1968-ம் ஆண்டு தனது 14 வயதில் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஜூலியட்டாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். இந்தப் படத்துக்காக கோல்டன் குளோப் உட்பட பல விருதுகளைப் பெற்றார். தொடர்ந்து ‘சம்மர் டைம் கில்லர்’, ‘பிளாக் கிறிஸ்துமஸ்’, ‘டெத் ஆஃப் நைல்’, ‘ஐஸ்கீரிம் மேன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள இவர், கடைசியாக 2015-ல் வெளியான, ‘சோஷியல் சூசைட்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வசித்து வந்த இவருக்கு கடந்த 2008-ம் ஆண்டு மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு, அதற்காக சிகிச்சைப் பெற்றார். பின்னர் 2018-ம் ஆண்டு மீண்டும் புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று முன் தினம் காலமாகிவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஹாலிவுட் திரை பிரபலங்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in