நட்சத்திர ஓட்டலில் மோதல்: பிரபல நடிகர் ஜேமி ஃபாக்ஸ் காயம்

நட்சத்திர ஓட்டலில் மோதல்: பிரபல நடிகர் ஜேமி ஃபாக்ஸ் காயம்

Published on

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேமி ஃபாக்ஸ். இவர், ட்ரீம் கேர்ள்ஸ், மியாமி வைஸ், ஹாரிபிள் பாஸஸ், பேபி டிரைவர், அமேஸிங் ஸ்பைடர்மேன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ரே (Ray) படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரேவரிஹில்ஸ் உணவகம் ஒன்றில் இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தனது பிறந்த நாளுக்காக, நண்பர்களுக்கு விருந்து வைத்தார். அப்போது பக்கத்து மேஜையில் இருந்தவர்களுக்கும் இவர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், அருகில் இருந்த கண்ணாடி பொருளை எடுத்து நடிகர் ஜேமி ஃபாக்ஸ் மீது வீசினர். இதில் அவரது வாயில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்குத் தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in