‘முஃபசா: தி லயன் கிங்’ படத்துக்கு குரல் கொடுத்த அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன்! 

‘முஃபசா: தி லயன் கிங்’ படத்துக்கு குரல் கொடுத்த அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன்! 
Updated on
1 min read

சென்னை: ‘முஃபாசா: தி லயன் கிங்’ ஹாலிவுட் படத்தின் தமிழ் பதிப்புக்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன் உள்ளிட்டோர் குரல் கொடுத்துள்ளனர்.

கடந்த 1994-ல் ‘தி லயன் கிங்’ அனிமேஷன் திரைப்படம் வெளியானது. 2 ஆஸ்கர் விருதை இந்தப் படம் வென்றது. கடந்த 2019-ல் லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக ‘தி லயன் கிங்’கின் ப்ரீக்வல் வெளியானது. இந்தப் படம் உலக அளவில் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடித்தது. அந்த வரிசையில் அடுத்ததாக ‘முஃபாசா: தி லயன் கிங்’ படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் முஃபாசா கதாபாத்திரம் குறித்து விரிவாக பேசுகிறது. இதனை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் தமிழ் பதிப்பில், அர்ஜுன் தாஸ் முஃபாசா கதாபாத்திரத்துக்கும், அசோக் செல்வன் டாக்கா கதாபாத்திரத்துக்கும் குரல் கொடுத்துள்ளனர். ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோனா கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளனர். கிரோஸ் கதாபாத்திரத்துக்கு நாசர், ரஃபிக்கி கதாபாத்திரத்துக்கு விடிவி கணேஷ் குரல் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அர்ஜுன் தாஸ் கூறுகையில், “முஃபாஸா: தி லயன் கிங் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது கனவு போல இருக்கிறது. நம் குழந்தைப் பருவ நினைவுகள் அனைத்திலும் தனி இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு கதாபாத்திரத்துக்கு குரல் கொடுப்பது பெருமையாக இருக்கிறது. சிறுவயதில், தி லயன் கிங் படத்தைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த பாக்கியம்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in