ஒரே நாளில் 27 மில்லியன் டாலர் வாரிக் குவித்த ‘இன்க்ரெடிபிள்ஸ் 2’

ஒரே நாளில் 27 மில்லியன் டாலர் வாரிக் குவித்த ‘இன்க்ரெடிபிள்ஸ் 2’
Updated on
1 min read

டிஸ்னி பிக்ஸார் நிறுவனத்தின் ‘இன்க்ரெடிபிள்ஸ் 2’ அனிமேஷன் திரைப்படம், கடந்த வெள்ளியன்று வெளியானது. வெளியான ஐந்தே நாட்களில் 233 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை செய்துள்ள இந்தப் படம், கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 27 மில்லியன் டாலர்களை வாரிக் குவித்துள்ளது. இதுவரை வெளியான அனிமேஷன் படங்களிலேயே அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்ற பெருமையை ‘இன்க்ரெடிபிள்ஸ் 2’ பெற்றுள்ளது.

இதே டிஸ்னி பிக்ஸாரின் தயாரிப்பான ‘ஃபைன்டிங் டோரி’ திரைப்படம், வெளியாகி ஐந்தே நாட்களில் 23.1 மில்லியன் டாலர்களை வசூல் செய்து முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்தச் சாதனையை ‘இன்க்ரெடிபிள்ஸ் 2’ தகர்த்து, பாக்ஸ் ஆபீஸைத் தக்க வைத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ‘ஜுராசிக் வேர்ல்டு: த ஃபாலன் கிங்டம்’ திரைப்படம், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மட்டும் 24.3 மில்லியன் டாலர்களை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ப்ராட் பேர்டு இயக்கியுள்ள ‘இன்க்ரெடிபிள்ஸ் 2’, இரண்டாம் வாரத்தில் 90 மில்லியன் டாலர் முதல் 100 மில்லியன் டாலர் வரை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் வரும் வெள்ளிக்கிழமைதான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in