பிரபல சீன நடிகை செங் பெய் பெய் காலமானார்

'கம் ட்ரிங் வித் மீ' படத்தில் செங் பெய் பெய்
'கம் ட்ரிங் வித் மீ' படத்தில் செங் பெய் பெய்
Updated on
1 min read

முதல் அதிரடி ஆக் ஷன் நடிகை என்று கூறப்படும் சீனாவைச் சேர்ந்த செங் பெய் பெய் (Cheng Pei Pei) காலமானார். அவருக்கு வயது 78.

குங் ஃபூ சண்டைக் காட்சிகளுடன் 1966-ம் ஆண்டு வெளியான ‘கம் டிரிங் வித் மி’ படம் மூலம் பிரபலமானவர் செங் பெய் பெய்.உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ஆங் லீயின் அதிரடி ஆக்‌ஷன் படமான ‘கிரவுச்சிங் டைகர், ஹிடன் டிராகன்’ படம் மூலம் இன்னும் பிரபலமானார். இந்தப் படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது. தொடர்ந்து ‘நேக்ட் வெப்பன்’, ‘ஸ்ட்ரீட்பைட்டர்: தி லெஜண்ட் ஆஃப் சுன்-லி’ உட்பட பலபடங்களில் நடித்துள்ளார்.

முதல் பெண் அதிரடி ஆக்‌ஷன் நடிகை என்று கூறப்படும் இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in