மார்வெல் பட நடிகை எவாஞ்சலின் லில்லி நடிப்புக்கு முழுக்கு

மார்வெல் பட நடிகை எவாஞ்சலின் லில்லி நடிப்புக்கு முழுக்கு
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் நடிகை எவாஞ்சலின் லில்லி. தி ஹர்ட் லாக்கர், ரீல் ஸ்டீல், தி ஹோபிட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மார்வெல் படங்களான ஆன்ட்-மேன், ஆன்ட்-மேன் அண்ட் தி வாஸ்ப், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம், ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா ஆகிய படங்களில் ஹோப் வான் டைன் / வாஸ்ப் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். இந்த 44 வயது நடிகை இப்போது நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இப்போது நான் மகிழ்ச்சியுடன் திருப்தியாக இருக்கிறேன். எனக்கு கிடைத்த ஆசிர்வாதங்களுக்கு நன்றியுள்ளவளாக உணர்கிறேன். செல்வம் மற்றும் புகழ் போன்றவற்றில் இருந்து விலகிச் செல்வது சில நேரம் பயம் தரலாம். உங்கள் தர்மம் அந்தப் பயத்தை நிறைவானதாக மாற்றும்.

ஒரு நாள் நான் ஹாலிவுட்டுக்கு திரும்பலாம்” என்று தெரிவித்துள்ளார். மனிதாபிமான பணிகளிலும் எழுதுவதிலும் நேரத்தை செலவிட இருப்பதாகவும் எவாஞ்சலின் லில்லி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in