அமெரிக்காவில் தயாரான தமிழ்ப்படம் ‘தி வெர்டிக்ட்’

அமெரிக்காவில் தயாரான தமிழ்ப்படம் ‘தி வெர்டிக்ட்’

Published on

சென்னை: அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் ஆஸ்டினில்படமாக்கப்பட்டுள்ள தமிழ் திரைப்படம், ‘தி வெர்டிக்ட்’. சுஹாசினி, வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன், பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோருடன் அமெரிக்கக் கலைஞர்களும் இதில் நடித்துள்ளனர்.

அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பாடகர் ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார். அக்னி என்டர்டெயின்மென்ட் (அமெரிக்கா), அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து இதை தயாரித்துள்ளது. டெக்சாஸில் வசிக்கும் பிரகாஷ் மோகன்தாஸ், கிருஷ்ணா சங்கர் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் மூலம் இவர்கள் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் பிரசன்னா, சினேகா வெளியிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in