

சென்னை: ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் சர்வதேச படம், ‘சென்னை ஸ்டோரி'. இதில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார். டிமேரி என் முராரியின் ‘அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற ரொமான்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்த நிலையில், தசை அழற்சி பிரச்சினை காரணமாக, சமந்தா விலகினார்.
இதையடுத்து, அவருக்குப் பதிலாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் அவர் அனு என்கிற டிடெக்டிவ்வாக நடிக்கிறார். இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பில் இப்போது இணைந்துள்ளதாகவும் அது உற்சாகத்தை அளிப்பதாகவும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.