ரூ.5 கோடிக்கு ஏலம் போனது ‘டைட்டானிக்’ பட மரக் கதவு

ரூ.5 கோடிக்கு ஏலம் போனது ‘டைட்டானிக்’ பட மரக் கதவு
Updated on
1 min read

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் உட்பட பலர் நடித்து வரவேற்பைப் பெற்ற படம், ‘டைட்டானிக்’. 1912-ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் என்ற கப்பலை பற்றிய படம் இது.

இந்த விபத்தில், அதில் பயணித்த 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1997-ல் வெளியான டைட்டானிக் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் சாதனைப் படைத்தது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு மரக்கதவை பிடித்தபடி, நாயகன் டிகாப்ரியோவும் நாயகி கேட் வின்ஸ்லெட்டும் மிதந்தவாறு இருப்பார்கள். இந்த மரக்கதவு சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

இதை ரூ.5 கோடிக்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். அதோடு, 1980-ல் வெளியான 'தி ஷைனிங்' படத்தில் இடம்பெற்ற ஜாக் நிக்கல்சன் பயன்படுத்திய கோடாரி, 1984-ல் வெளியான 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் ஆஃப் டூம்' படத்தில் பயன்படுத்தப்பட்ட சாட்டை உள்ளிட்ட பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதில் டைட்டானிக் மரக்கதவு மட்டும் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in